கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் வருகை அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர்் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர்் அலுவலகத்தில்் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் காமராஜ்் தலைமை தாங்கினார்.
பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றினால் கடந்த 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு நிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்கின்ற அடிப்படையில் வளர்ச்சி பணிகளும் பாதிக்காமல் அதே நேரத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா நோய் தொற்றிலிருந்து விடுபட கூடிய வெற்றி பாதையில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67.56 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் 73.64 சதவீதமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை என்பது 82.08 சதவீதமாக உள்ளது. உலக அளவில் தமிழகத்தில் தான் அதிகம் பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் ஆய்வு
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்டம் தோறும் முதல்-அமைச்சர்் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு செய்ய உள்ளார். திருவாரூரில் வருகிற 28-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
விளைச்சல் அதிகரிக்கும்
தமிழகத்தில் 3 லட்சத்து 87 ஆயிரம்் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக தொடர்ந்து 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாகுபடி பரப்பும், விளைச்சலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தினகரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடியை அடுத்த மேல மரவாக்காடு கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் குடும்பத்துடன் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி, அ.தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். பின்னர் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து, மாற்றுக்கட்சியிலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்று, பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணபொருட்களை வழங்கினார். முன்னதாக ஒன்றியகுழு உறுப்பினர் டி.ஜி.மணிகண்டன் வரவேற்றார். இதில் மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் டி.மனோகரன், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்.வாசுகிராமன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி

தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே முக கவசங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முக கவசம் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களும் தரத்தை உறுதி செய்த பின்னர் தான் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க திருவாரூர் மாவட்டத்தில் நாள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.