வேலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சருக்கு மாநகர அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

Update: 2020-08-20 22:00 GMT
வேலூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். வேலூர் வருகைதந்த முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை வேலூர் மாநகர அ.தி.மு.க. சார்பில், மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்றார்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.மூர்த்தி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பி.நாராயணன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் கே.ஜெயபிரகாசம், வேலூர் தொகுதி முன்னாள் செயலாளர் சி.கே.சிவாஜி, வேலூர் ஒன்றிய செயலாளர் ஜெ.நாகராஜ், பொருளாளர் கே.விஜயன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் எம்.ராகவன், காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், சுகாதாரக்குழு முன்னாள் தலைவர் கே.பி.ரமேஷ், மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், வேலூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூஞ்சூர்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆர்.குமார், வேலூர் கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.குப்புசாமி, அல்லாபுரம் மேற்கு பகுதி செயலாளர் ஏ.ஜி.பாண்டியன், காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் பேரவை ஏ.ரவி, வடக்கு பகுதி செயலாளர் பி.ஜனார்த்தனன், பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி எம்.ஆர்.ரெட்டி, பென்னாத்தூர் பேரூராட்சி செயலாளர் பி.அருள்நாதன், துணை செயலாளர் எம்.ராஜா, ஒடுகத்தூர் முன்னாள் நகர செயலாளர் கே.சம்பத்குமார், குடியாத்தம் எம்.ராமநாதன், திருவலம் பேரூராட்சி செயலாளர் எஸ்.பாஸ்கர், வேலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் கழிஞ்சூர் வி.ராஜகுமார், 22-வது வட்ட செயலாளர் சி.கே.எஸ்.வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்