சேலம் மாவட்டத்தில், கொரோனாவுக்கு ஒரே நாளில் 295 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தான் சேலம் மாவட்டத்தில் அதிகபட்ச பாதிப்பாகும்.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 172 பேர், சேலம் ஒன்றியத்தில் 15 பேர், ஆத்தூரில் 14 பேர், மகுடஞ்சாவடியில் 12 பேர், நங்கவள்ளியில் 9 பேர், வீரபாண்டி, பேளூர் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், கொங்கணாபுரம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், எடப்பாடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், சங்ககிரியில் 4 பேர், ஓமலூரில் 3 பேர், மேச்சேரி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
மேலும் சென்னையில் இருந்து சேலம் வந்த 2 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து சேலம் வந்த 3 பேர், மராட்டியம், பெங்களூருவில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,766 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 238 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.