குர்லாவில் வசிக்கும் தோழியின் குழந்தையை கடத்திய தம்பதி கைது மால்வாணியில் சிக்கினர்
தோழியின் ஒரு வயது குழந்தையை கடத்தி சென்ற தம்பதியை மால்வாணியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அக்குழந்தையை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மும்பை,
நவிமும்பை தலோஜாவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது35). இவரது மனைவி ரேஷ்மா(32). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. நேற்று காலை மும்பை குர்லாவில் வசிக்கும் ஒரு தோழியின் வீட்டிற்கு தம்பதி சென்றனர்.
வீட்டில் இருந்த தோழியின் ஒரு வயது குழந்தைக்கு புதிய ஆடை மற்றும் சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி இப்ராகிம் அக்குழந்தையை அழைத்து சென்றார்.
வெகுநேரமாகியும் இப்ராகிம் வராததால் வீட்டில் இருந்த அவரது மனைவி ரேஷ்மா, தான் அவர்களை தேடி அழைத்து வருவதாக கூறிச்சென்றார்.
குழந்தையுடன் சென்ற இப்ராகிம் மற்றும் அவரை தேடி சென்ற ரேஷ்மாவும் நீண்ட நேரமாக வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அப்பெண் அவர்களை தொடர்புகொள்ள செல்போனை தேடினார். ஆனால் அவருக்கு செல்போன் கிடைக்கவில்லை. வீட்டிற்கு வந்த ரேஷ்மா செல்போனை திருடி சென்றுவிட்டதை உணர்ந்தார்.
இது குறித்து உடனடியாக குர்லா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தம்பதி மால்வாணியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.