“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சட்டப்பூர்வ வழிகளை கையாளுவோம்” நிறுவன முதன்மை செயல் அலுவலர் பங்கஜ்குமார் பேட்டி
“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சட்டப்பூர்வ வழிகளை கையாளுவோம்“ என்று அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பங்கஜ்குமார் கூறினார். இதுகுறித்து அவர் நேற்று மதியம் ஸ்டெர்லைட் நிறுவன அலுவலர்கள் குடியிருப்பில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி,
சென்னை ஐகோர்ட்டு அளித்து உள்ள இந்த தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. நாங்கள் எதிர்பார்த்ததற்கு நேர் எதிரானது. எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுக்கு வலியை தரக்கூடிய தீர்ப்பு. எங்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்த 50 ஆயிரம் மக்களின் நம்பிக்கையையும் குலைத்த தீர்ப்பு. அவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். ஒருபுறம் தமிழக அரசு புதிய முதலீட்டாளர்களை அழைத்து வருகிறது. மற்றொரு புறம் முழுமையாக சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் ஒரு நிறுவனத்தை தன்னிச்சையாக மூடி உள்ளது.
நாங்கள் கடந்த 25 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கும், தேசத்தின் பொருளாதாரத்துக்கும் அதிக பங்களிப்பு செய்து உள்ளோம். கடந்த காலங்களில் இந்தியாவின் தாமிரம் உற்பத்தி தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து உள்ளோம். இதனால் தாமிரத்தில் தன்னிறைவு பெற்று இருந்தோம். ஆனால் கடந்த 2½ ஆண்டுகளில் நாடு அதிக விலை கொடுத்து தாமிரத்தை இறக்குமதி செய்து உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஆலையை மீண்டும் திறக்க எங்களுக்கு உள்ள அனைத்து சட்டப்பூர்வமான வழிகளையும் நாங்கள் கையாளுவோம்.
கடந்த 2½ ஆண்டுகளாக ஆலை மூடி உள்ளது. தற்போது பொருளாதார சூழ்நிலையும் சரியாக இல்லை. இதனால் தொடர்ந்து அதே எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வைத்துக் கொள்வது கடினமானது. இதனால் ஆட்குறைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி வரை இழப்பு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடிக்கான வர்த்தகம் தடை ஏற்பட்டு உள்ளது. இதுதவிர எங்களை சார்ந்த தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த தீர்ப்பு கண்டிப்பாக புதிதாக வரும் முதலீட்டாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இது தேச பொருளாதாரம், மாநில பொருளாதாரம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிறுவனத்தை தன்னிச்சையாக மூட முடிவெடுத்தது, எந்தவிதமான ஆய்வும் இல்லாமல், எல்லோரும் கூறுகிறார்கள் என்பதற்காக எடுத்த நடவடிக்கை.
சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் அதிக மாசு உள்ள நிறுவனம் ஸ்டெர்லைட் என்று தமிழக அரசு வாதம் வைக்கிறது. அது அரசின் வாதமே தவிர, கோர்ட்டின் சட்டப்பூர்வமான நிலைப்பாடு அல்ல. 2013 முதல் 2018-ம் ஆண்டு ஆலை மூடப்படும் வரை 5 ஆண்டுகள் எங்கள் நிறுவனம் மீது மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக எந்த ஒரு வழக்கும் கிடையாது. நாங்கள் அனைத்து விதமான விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு உள்ளோம்.
இந்த வழக்கு சிக்கலான வழக்கு. இதனால் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்குவதற்கு கால அவகாசம் எடுப்பது ஏற்கக்கூடியது. இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம் சமூக திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. எங்களுக்கான சட்ட வழிமுறைகள் இல்லாமல் போகும் வரை வேதாந்தா நிறுவனம் மூலம் சமூக திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, நிறுவன துணைத்தலைவர் தனவேல் உடன் இருந்தார்.