தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கழுக்குன்றம், தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்பாக்கம்,
திருக்கழுக்குன்றத்தை அடுத்த தாழம்பேடு கிராமம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு முருகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். தனி அறையில் படுத்திருந்த அவர் இரவு சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருக்கழுக்குன்றம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.