கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலி - 53 பேருக்கு தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு விவசாயி பலியானார். மேலும் 53 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2020-08-18 05:30 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,919 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,296 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று 398 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில், 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,972 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பகண்டை கூட்டு ரோட்டை சேர்ந்த 54 வயது விவசாயி நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்