செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 224 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 224 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-08-18 01:29 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கம்பர் தெருவை சேர்ந்த 24 வயது வாலிபர், நந்தனார் தெருவில் வசிக்கும் 21 வயது வாலிபர் உள்பட 10 பேர், நத்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் 50 வயது பெண், 41 வயது ஆண் உள்பட 9 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 2 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 151 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 18 ஆயிரத்து 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 37 வயது பெண், காமராஜ் சாலைப் பகுதியை சேர்ந்த 34 வயது பெண், 12 வயது சிறுவன், 8 வயது சிறுமி, 55 வயது ஆண், மாடம்பாக்கம் பகுதியை 40, 43 மற்றும் 23 வயதுடைய பெண்கள், 57 வயது ஆண், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், எழிச்சூர் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 35 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 11 ஆயிரத்து 58 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 798 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 179 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 909 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 341 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்