முதலியார்பேட்டையில் பரபரப்பு: கள்ளக்காதல் தகராறில் மெக்கானிக்கை கொலை செய்தது அம்பலம் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி, தம்பி கைது
கள்ளக்காதல் தகராறில் மெக்கானிக்கை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடிய மனைவி, தம்பியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
முதலியார்பேட்டையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 32). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கோபிநாத் புதுச்சேரிக்கு வந்து குடியேறினார். கார் டிரைவர் வேலைக்கு சென்று வந்த அவர் பல இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் முதலியார்பேட்டை சுதானாநகர் ராஜாஜி வீதியில் ஒரு வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக கார் ஓட்டுவதில் இருந்து வந்த சிக்கலால் வேலை இன்றி மெக்கானிக் வேலைக்கு சென்று வந்தார். கோபிநாத்தின் சித்தி, சித்தப்பா இருவரும் இறந்து விட்ட நிலையில் அவர்களது மகனான கார்த்தி (26) பூரணாங்குப்பத்தில் தனியாக வசித்து வந்தார். அவரும் சுதானா நகரில் உள்ள கோபிநாத்தின் வீட்டில் வந்து தங்கினார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி முதலியார்பேட்டை போலீசார் அங்கு சென்று கோபிநாத்தின் உடலை கீழே இறக்கி பார்த்ததில் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் காணப்பட்டது. வீட்டிலும் யாரும் இல்லாததும் தெரியவந்தது. எனவே அவரை அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடுவதற்காக தூக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதில் பூரணாங்குப்பத்தில் கவுசல்யாவும், கார்த்தியும் இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருப்பது அம்பலமானது. அதாவது, கோபிநாத்தின் வீட்டில் தங்கி இருந்த கார்த்திக்கும், கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதுபற்றி அறிந்த கோபிநாத் குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவி கவுசல்யாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இதுதொடர்பாக கார்த்தியிடம் கேட்டதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கார்த்தி அங்கு கிடந்த கட்டையால் கோபிநாத்தை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து மயங்கிய கோபிநாத்தை கயிற்றால் தூக்கில் மாட்டி இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு கவுசல்யாவும் உடந்தையாக இருந்துள்ளார். இதன்பின் அவர்கள் இருவரும் பூரணாங்குப்பத்துக்கு தப்பிச் சென்ற நிலையில் போலீஸ் பிடியில் சிக்கிய பரபரப்பு தகவல் வெளியானது.
இதையடுத்து கணவர் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி கவுசல்யா, அவரது கள்ளக்காதலன் கார்த்தியை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை முடிவு வந்ததும் முறைப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கவுசல்யா, கார்த்தி ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.