முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்திரா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகனான டாக்டர் யதீந்திரா எம்.எல்.ஏ.வுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.சி.க்கள் என 34 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவின் இளைய மகன் டாக்டர் யதீந்திரா. இவர் மைசூரு மாவட்டம் வருணா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தராமையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ரேபிட் ஆன்டிஜென் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானது.
யதீந்திரா எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
இதனால் அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் யதீந்திரா நெருங்கிய தொடர்பில் இருந்தார். இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருந்தார். மேலும் யதீந்திரா தன்னை கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று யதீந்திராவின் கொரோனா பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் யதீந்திரா எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, என்னுடைய கொரோனா பரிசோதனை அறிக்கையில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். யதீந்திரா எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது.