மும்பை போலீசார் மீது நம்பிக்கையில்லை என்றால் அம்ருதா பட்னாவிஸ் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் மந்திரி ஆவேசம்

மும்பை போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் அம்ருதா பட்னாவிஸ் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மந்திரி அனில்பரப் ஆவேசமாக தெரிவித்தார்.

Update: 2020-08-04 19:18 GMT
மும்பை,

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் நேற்று முன்தினம் டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில், அவர் மும்பை பெருநகர போலீசார் நடிகர் சுஷாந்த் சிங் வழக்கை விசாரிப்பதை பார்க்கும் போது, மும்பை அதன் மனிதநேயத்தை இழந்து, இனிமேல் வாழ பாதுகாப்பற்றது போல உள்ளது என கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து சிவசேனாவை சேர்ந்த மாநில போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் கூறியதாவது:-

வெளியேற வேண்டும்

கடந்த ஆண்டுதான் அரசு மாறி உள்ளது. ஆனால் அதே போலீசார் தான் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அவரை பாதுகாத்த, தொடர்ந்து தற்போது வரை அவரை காத்து வரும் போலீசார் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர் இந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கிறேன். ஆட்சியை இழந்ததால் மட்டும் பாதுகாப்பு இல்லாதது போல உணர்ந்தால் அவர்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. ஆட்சியை இழந்த விரக்தியில் அவர் அப்படி பேசுகிறாா். அவரின் பேச்சுக்கு பின்னால் 100 சதவீதம் அரசியல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்