விருதுநகர் மாவட்டத்தில், ஒரே நாளில் 348 பேருக்கு கொரோனா; 9 பேர் பலி - பாதிப்பு எண்ணிக்கை 9,380 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 9,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Update: 2020-08-03 22:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 68,168 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 9,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,059 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 6,091 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 7 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 558 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 1300 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்த 40 வயது நபர், காமராஜர் காலனியை சேர்ந்த 45 வயது பெண், அல்லம்பட்டியை சேர்ந்த 54 வயது பெண், குமரன் தெருவை சேர்ந்த 24 வயது நபர், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 19 வயது பெண், கோவிந்தநல்லூரை சேர்ந்த 50 வயது பெண், வாடியான் தெருவை சேர்ந்த 48 வயது நபர், என்.ஜி.ஓ.காலனி சரோஜினி தெருவை சேர்ந்த 23 வயது நபர், சூலக்கரை போலீஸ் குடியிருப்பை சேர்ந்த 7 வயது சிறுவன், அய்யனார்நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்ளிட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் சிவகாசி சோலைக்காலனியை சேர்ந்த 55 வயது நபர், பி.கே.எஸ். தெருவை சேர்ந்த 40 வயது நபர், 67,44,16 வயது நபர்கள், ஆனைக்குட்டத்தை சேர்ந்த 65,50 வயது நபர்கள், மீசலூரை சேர்ந்த 73 வயது மூதாட்டி, அழகியநல்லூரை சேர்ந்த 58 வயது நபர், முத்துராமன்பட்டியை சேர்ந்த 65 வயது நபர், தீயணைப்பு குடியிருப்பை சேர்ந்த 30 வயது நபர், செவல்பட்டியை சேர்ந்த 30 வயது நபர், அகதிகள் முகாமை சேர்ந்த 4 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் அருப்புக்கோட்டையை சேர்ந்த 4 பேர், சொக்கநாதன்புதூர், வீரர்பட்டியை சேர்ந்த 3 பேர், காரியாபட்டி, தம்பிப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 348 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் நேற்று 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9,380 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று நடந்த முகாமில் 120 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முகாம்கள் மக்கள் அதிகம் வரக்கூடிய பகுதிகளில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் செய்திகள்