பிறந்த நாளில் மது வாங்கி தராததால் ஆத்திரம்: வாலிபருக்கு கத்திக்குத்து; சகோதரர்கள் தப்பி ஓட்டம்

பிறந்த நாளில் மது வாங்கி தராததால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் வாலிபரை கத்தியால் அவரது முதுகில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

Update: 2020-08-02 01:58 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனி மேலாண்ட தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் தினகரன் (வயது 24). கடந்த 27-ந் தேதி தினகரனின் பிறந்த நாளையொட்டி அவரது வீட்டிற்கு வந்த அவரது நண்பர்களான சுந்தரராமன், அனந்தராமன் ஆகிய 2 பேரும் மது வாங்கி தருமாறு வற்புறுத்தி உள்ளனர்.

அதற்கு தினகரன் தற்போது தன்னிடம் பணமில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்களான சுந்தரராமன், ஆனந்தராமன் 2 பேரும் தினகரனை தகாத வார்த்தைகளால் பேசி தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரது முதுகில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுந்தரராமன், அனந்தராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்