திருவையாறில், இந்தியன் வங்கியின் புதிய கட்டிடம் கும்பகோணம் மண்டல மேலாளர் திறந்து வைத்தார்
திருவையாறில் இந்தியன் வங்கியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
திருவையாறு,
திருவையாறில் இயங்கிவரும் இந்தியன் வங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. திருவையாறு கிளை மேலாளர் குணசீலன் வரவேற்றார். விழாவில் கும்பகோணம் மண்டல மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி தலைமை தாங்கி, புதிய வங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய ஏ.டி.எம். மையத்தை துணை மண்டல மேலாளர் மோகன் திறந்து வைத்தார். இதில் முதன்மை மேலாளர் ராஜா வங்கி கிளையின் பெருமைகளை பற்றி எடுத்து கூறினார். பின்னர் வங்கியில் பயனாளிகளுக்கு தனிநபர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் மோகன் வைப்பு தொகை வழங்கினார். இதில் திருப்பூந்துருத்தி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அனுசியா, அம்மன்பேட்டை கிளை மேலாளர் வசந்தகுமார், திருவையாறு வங்கி கிளை உதவி மேலாளர் ஹரிபிரசாத் மற்றும் திருவையாறு வங்கியின் ஊழியர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.