100 நாள் வேலைத்திட்ட பணிகளை ஊராட்சி தலைவர்கள் மூலம் செயல்படுத்த கோரிக்கை
100 நாள் வேலைத்திட்ட பணிகளை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலமாக செயல்படுத்தக் கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சித்ரா மருது தலைமையில் செயலாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் திரளாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஊராட்சி தலைவர்கள் பதவி ஏற்ற பின்னர் நிறைவேற்றப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் மூலமாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு தலைவர் சித்ரா மருது, செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை களை முன் வைத்தனர்.