மராட்டியத்தில் ஒரே நாளில் 10,333 பேர் குணமடைந்தனர் 3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்தது
மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. அதன்படி நேற்று 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் நேற்று 10 ஆயிரத்து 333 பேர் குணமடைந்தனர்.
மும்பை,
இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் உள்ளது.
புதிதாக 7,717 பேர்
இந்தநிலையில் நேற்று மராட்டியத்தில் புதிதாக 7 ஆயிரத்து 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் மாநிலத்தில் பதிவான குறைந்த பாதிப்பு இதுவாகும். இதுவரை மாநிலத்தில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 277 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இதில் சாதனை அளவாக நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 333 பேர் தொற்றில் இருந்து மீண்டனர். தற்போது 1 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 282 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்து உள்ளனர். மராட்டியத்தில் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் சதவீதம் 3.62 ஆக உள்ளது. இதேபோல குணமானவர்கள் சதவீதம் 59.34 ஆக உள்ளது.
தானே, நவிமும்பை
மாநிலத்தில் தானே, புனேயில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று தானே மாநகராட்சியில் 191 பேருக்கும், கல்யாணில் 219 பேருக்கும், நவிமும்பையில் 335 பேருக்கும், புனே மாநகராட்சியில் 1,182 பேருக்கும், பிம்பிரி சிஞ்வாட்டில் 673 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் குறைந்தது
மும்பையில் நோய் பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் நேற்று நகரில் புதிதாக 700 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு மும்பையில் பதிவான குறைந்த நோய் பாதிப்பு இதுவாகும். அதாவது கடந்த மே 5-ந்தேதி 635 பேருக்கும், மே 6-ந் தேதி 769 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து 1,000 மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கூட 1,021 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
இந்தநிலையில் மும்பையில் நேற்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 8 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோதிலும் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருப்பது சுகாதாரத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது பொதுமக்களுக்கும் ஆறுதலான செய்தியாக அமைந்தது.
79 சதவீதம் பேர் குணமடைந்தனர்
இதற்கிடையே மும்பையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 882 ஆக உள்ளது. இதில் 84 ஆயிரத்து 411 பேர் குணமடைந்து உள்ளனா். தற்போது 19 ஆயிரத்து 990 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மும்பையில் குணமானவர்களின் சதவீதம் 79 ஆக உள்ளது. நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 69 நாட்களாக உயர்ந்து இருக்கிறது.
இதேபோல நகரில் மேலும் 55 பேர் தொற்று நோய்க்கு பலியானார்கள். இதில் 38 பேர் ஆண்கள். 17 பேர் பெண்கள். இதுவரை தலைநகரில் 6 ஆயிரத்து 187 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். மும்பையில் தற்போது 627 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 6 ஆயிரத்து 22 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஆதித்ய தாக்கரே மகிழ்ச்சி
இதற்கிடையே மும்பையில் தொற்று பரவல் குறைந்து இருப்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஒரு நல்ல செய்தி, மும்பையில் ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை(8,776) மேற்கொண்ட போதிலும், 700 பேருக்கே தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது. எனினும், மக்கள் பாதுகாப்பு விதிகளை கைவிட்டு விடக்கூடாது. முககவசம் அணிவதை தொடருங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.