மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-07-28 05:59 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே ஐவநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கீழையூர்

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி கடை தெருவில் விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் செல்லையன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் செல்வம், இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் கீழையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையிலும், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர் சித்தார்த்தன் கலந்து கொண்டார்.

திருமருகல்

திருமருகல் ஒன்றியம் நடுக்கடை கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி, ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மு.சேரன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜீவானந்தம், வலிவலம் வீரசெல்வம், கொடியாலத்தூர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாட்டியக்குடியில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கே.எஸ் கோபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதமங்கலம், காக்கழனி, ஆந்தக்குடி, தேவூர், 75 அணக்குடி, வடகரை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைஞாயிறு- திட்டச்சேரி

தலைஞாயிறு கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் பேருராட்சி தலைவர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திட்டச்சேரி பஸ் நிலையத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலகத்தில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை, சீர்காழி

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் ம.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் வீராசாமி, நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சீர்காழியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணை செயலாளர் நீதிசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

திருக்கடையூர், பொறையாறு

திருக்கடையூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சிம்சன் தலைமை தாங்கினார். தி.மு.க. கிளை செயலாளர் மைனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

பொறையாறில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். இதேபோல் செம்பனார்கோவிலில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகே புத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

மேலும் செய்திகள்