வேலூர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு, டாக்டர்கள் உள்பட 166 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்ட சிறப்பு புலனாய்வுக்குழு துணை போலீஸ் சூப்பிரண்டு, 6 டாக்டர்கள் உள்பட 166 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,273 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்,
வேலூர் மண்டல சிறப்பு புலனாய்வுக்குழு அலுவலகம் வேலூர் வசந்தபுரத்தில் உள்ளது. இந்த மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் உள்ளன. சிறப்பு புலனாய்வுக்குழு துணை போலீஸ் சூப்பிரண்டாக தமிழ்செல்வன் (வயது 47) பணியாற்றி வருகிறார்.
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து அவருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. அதன் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த அலுவலகத்துக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்த போலீசார் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
6 டாக்டர்கள்
மேலும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 6 டாக்டர்கள், 8 நர்சுகள், ஊழியர்கள் உள்பட 16 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் நெருங்கி பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 10 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகி உள்ளது.
166 பேருக்கு..
அதைத்தவிர சத்துவாச்சாரி கோர்ட்டு ஊழியர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர், ஆயுதப்படை போலீசார் 2 பேர் மற்றும் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டிருந்த ஆயுதப்படை போலீசாரின் குடும்பத்தினர் 2 பேர், வேலூர் மத்திய ஜெயில் காவலர்கள், ஜெயில் ஊழியர், நகைக்கடை ஊழியர், வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளி, சத்துவாச்சாரியில் 4 வயது ஆண்குழந்தை, கஸ்பாவில் 9 வயது பெண்குழந்தை, மாநகராட்சி பகுதியில் 107 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 166 பேருக்கு ஒரேநாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 5,273 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 3,992 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,107 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 958 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,352 ஆக அதிகரித்துள்ளது.