புதிதாக 86 பேருக்கு கொரோனா: புதுவையில் தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழப்பு சாவு எண்ணிக்கை 43 ஆனது
புதுச்சேரியில் நேற்று 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி,
மாநிலத்தில் நேற்று 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 53 பேர், ஜிப்மர் மருத்துவமனையில் 33 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர புதுச்சேரியில் 103, ஏனாமில் 10 என 113 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,872 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 27, ஜிப்மர் மருத்துவமனையில் 24, கொரோனா கேர் சென்டரில் 21, காரைக்காலில் 4 என மொத்தம் 76 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,720 ஆக உள்ளது.
தற்போது கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 455 பேர், ஜிப்மரில் 313 பேர், கொரோனா கேர் சென்டரில் 150 பேர், தமிழகத்தில் ஒருவர், காரைக்காலில் 32 பேர், ஏனாமில் 43 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 1,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 35,704 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 32,291 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 309 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது.
3 பேர் உயிரிழப்பு
இந்தநிலையில் புதுவை கொசப்பாளையத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 22-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலியார்பேட்டையை சேர்ந்த 47 வயது ஆண் ஏற்கனவே மலக்குடல் புற்றுநோய், சிறுநீரக பிரச்சினை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதற்காக கடந்த 22-ந் தேதி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதேபோல் மூலக்குளத்தை சேர்ந்த 65 வயது ஆண் நபர் கடந்த 11-ந் தேதி ஜிப்மரில் தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவர்களை சேர்த்து சாவு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
புதுவை மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.