மாமல்லபுரம் அருகே காவலாளியை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் கொள்ளை முயற்சி - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
மாமல்லபுரம் அருகே காவலாளியை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் கொள்ளை முயற்சி மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையை சேர்ந்த ஒருவரின் பங்களா வீடு உள்ளது. இங்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 42) என்பவர் குடும்பத்துடன் தங்கி காவலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் பங்களா சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே புகுந்தனர். காவலாளி ராஜேந்திரனை கத்தியால் குத்தி அவரை கட்டிப்போட்டு விட்டு கொள்ளையடிக்க முயன்றனர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் காவலாளி ராஜேந்திரனின் மனைவி கம்மலை பறித்தனர். அப்போது அங்கு வந்த பால்காரரின் சத்தம் கேட்டதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். காவலாளியின் மனைவி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். காயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக கோவளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அங்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.