தஞ்சை மாவட்டத்தில் இரவு 8 மணி வரை சாலையோர சிறுகடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், தரைக்கடை சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டத்தில் இரவு 8 மணி வரை சாலையோர சிறுகடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தரைக்கடை சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2020-07-24 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தரைக்கடை சங்கம் சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு, தலைவர் மணிமாறன், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் கோவிந்தராவிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் சாலையோரத்தில் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்கள், பூ விற்பனை, சிற்றுண்டி, சிறுஉணவகம், துணி வியாபாரம், பொம்மை உள்ளிட்ட வியாபாரம் செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

கொரோனா ஊரடங்கு கால நீட்டிப்பில் சில தளர்வாக இரவு 8 மணி வரை வியாபார நிறுவனங்கள் செயய்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் வணிகர் சங்கங்களின சில அமைப்புகள் கடந்த 22-ந்தேதி முதல் மாலை 4 மணியுடன் கடைகளை மூடுவதாக அறிவித்தன. இதையே மாவட்ட நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மாலை நேரங்களில் அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் சாலையோர சிறுகடை வியாபரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள் எனவே வணிகர் சங்கங்களின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து இரவு 8 மணி வரை சாலையோர சிறு கடைகள் செயல்பட ஆனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் குருசாமி, நசீர், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவி.மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்