கொரோனா இறப்பை குறைப்பதில் கூடுதல் கவனம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்

கொரோனா இறப்பை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தினார்.

Update: 2020-07-24 22:00 GMT
மும்பை,

நாட்டின் மற்ற மாநிலங்களை விட மராட்டியம் தான் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட மருத்துவ பணிக்குழு கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்தப்பட வேண்டும். கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதிலும், அதை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய மருத்துவ பணிக்குழு தலைவர் டாக்டர் சஞ்சய் ஒக், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில் கிராமப்புறங்களை சேர்ந்த டாக்டர்களுக்கு மருந்துகள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் மும்பை பணிக்குழுவை அணுக வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்