ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் அமைச்சர் ஆவேசம்
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மக்கள் போராட தயாராகி வருகிறார்கள் என அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
சட்டசபையில் கொரோனா தொற்று பரவல் தொடர்பான விவாதத்தின்போது அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-
புதுவையில் இலவச அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் அல்லது ஆசிரியர்களை வைத்து வழங்குமாறு கவர்னர் சொல்கிறார். இதனால் 3 நாளில் கொடுக்க வேண்டிய அரிசி 30 நாட்கள் ஆகிறது. அரிசியும் எடை குறைவாக உள்ளது.
கொரோனாவோடு போராடும் இந்த காலகட்டத்தில் மக்களுக்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் மற்றும் அதிகாரிகளோடும் போராடி வருகிறார். நான் 1990-ல் அமைச்சராக இருந்தபோது முதல்-அமைச்சர் உத்தரவு போடுவார். அதை அதிகாரிகள் செயல்படுத்துவார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.
பிரதமர் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்கிறார். ஆனால் கவர்னர் கிரண்பெடி புதுவையில் ரேஷன் கடை இல்லாத நிலையை உருவாக்கிவிட்டார். பிரதமரின் திட்டங்களைக்கூட கவர்னர் தடுக்கிறார். அமைச்சர்களின் அதிகாரங்களை பறிக்கிறார். தமிழ்நாட்டோடு, புதுவையை இணைக்க முயன்றபோது அதற்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டம் நடத்தினார்கள். அதுபோன்ற போராட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். அதிகாரம் பறிக்கப்படும் போது அனைவரும் கட்சி பாகுபாடின்றி அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி என்றாலே மதுபானங்கள் புகழ் பெற்றது. ஆனால் இங்கு அதன் விலையை ஏற்றி வருமானத்தை சீரழிக்கிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளை மதுபான கணக்கெடுப்புக்கு அனுப்புகிறார். அப்போது தாசில்தார் ஒருவரையும் போலீசார் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக நீதிபதி ராஜசூர்யா அறிக்கையின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்காக உழைக்க வேண்டும்.
புதுவையில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக இணைப்பு எதிர்ப்பு போராட்ட காலத்தை போன்று ஒரு போராட்டம் விரைவில் நடக்கும். அப்போது அதிகாரம் செய்பவர்கள் ஓடுவதை நாம் பார்ப்போம். கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் கருத்து வேறுபாடு என்றால் அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசு செயலர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. இந்த காலகட்டத்தில் உயர் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.