நாகை மாவட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகம் குறித்து அவதூறு பரப்பி, பொதுவுடைமை இயக்கத்தையும், சமூக செயல்பாட்டாளர்களையும் கொச்சைப்படுத்தி, மதவெறி மூலம் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும், சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கீழையூர் ஒன்றியம் சார்பில் திருக்குவளை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் இப்ராகிம், கிளை செயலாளர் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஷேக் அலாவுதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்லையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகை அவுரி திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி முன்னிலை வகித்தார்.
இதேபோல் திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் நிர்வாகிகள் ரமேஷ், மாசிலாமணி, தங்கையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் நாராயணன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலகுரு, முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வாய்மேடு போலீசாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இடும்பையன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் இமானுவேல், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மனோன்ராஜ் வரவேற்றார்.
சீர்காழியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன், பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொருளாளர் வக்கீல் சுந்தரையா, மாவட்ட விவசாய சங்க தலைவர் வீரராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கொள்ளிடம் அருகே புத்தூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் சிவராமன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறையாறில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகையன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பகத்சிங், மகளிர் அணி ஒன்றிய தலைவி தமிழ்ச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து கீழ்வேளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், மாதர் சங்க செயலாளர் மேகலா, மணிசேகரன், ராஜப்பா, வடகரை ஊராட்சி தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.