தஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட 83 பேருக்கு கொரோனா 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
தஞ்சை மாவட்டத்தில் டாக்டர், என்ஜினீயர் உள்பட மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்க்கெட் தொடர்புடையவர்கள் மூலம் இந்த தொற்று அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் டாக்டர், என்ஜினீயர், செவிலியர், ஆசிரியை, பி.எஸ்.என்.எல். அதிகாரி, தாராசுரம் மார்க்கெட் லோடு மேன்களும் அடங்குவர். 83 பேரில் கும்பகோணத்தை சேர்ந்த 60 பேரும், தஞ்சையை சேர்ந்த 11 பேரும், பட்டுக்கோட்டை, திருவையாறு பகுதியை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,245 ஆக அதிகரித்துள்ளது.
35 பேர் வீடு திரும்பினர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.