புதிய வரிவிதிப்புகள் எதுவும் இல்லை
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் புதிய வரிவிதிப்புகள் எதுவுமில்லை.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.9,500 கோடியில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தொகையை குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதைத்தொடர்ந்து புதுவை அரசு ரூ.9 ஆயிரம் கோடி பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது. பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே மத்திய அரசு கடந்த 17-ந் தேதி புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து பட்ஜெட்டை புதுவை சட்டசபையில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நேற்று கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் கவர்னர் உரை தாமதமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தன்னால் சட்டமன்றத்தில் தற்போது வர இயலாது என்பதால் வேறொரு நாளில் சட்டசபையை கூட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் அனுப்பினார்.
ஆனால் ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கவர்னர் கிரண்பெடி ஏற்கனவே பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமன்றத்தில் திட்டமிட்டபடி உரையாற்ற வேண்டும் என்றும் கவர்னருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பினார். இத்தகைய சூழ்நிலையில் புதுவை சட்டசபை நேற்று காலை 9.30 மணி அளவில் கூடியது. ஆனால் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற கவர்னர் கிரண்பெடி வரவில்லை. எனவே காலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய கூட்டம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் நண்பகல் 12 மணி அளவில் சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி 2020-2021-ம் ஆண்டுக்கான ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்புகள் ஏதும் இல்லை. அதே நேரத்தில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழைகள், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை வாசிக்க தொடங்கும்போது, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது யாருக்கும் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உரை பகல் 12.05 மணிக்கு தொடங்கி 2.50 மணிக்கு முடிந்தது. 150 பக்கம் கொண்ட அந்த பட்ஜெட்டை 2¾ மணி நேரம் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாசித்தார்.