10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்தம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலைநிறுத்ததில் ஈடுபடுவது என்று நியாய விலைக்கடை பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்செழியன், இணைச்செயலாளர் ஆடியபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுரேஷ்கண்ணா வரவேற்றார். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
புதுகை மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்த போது ரேஷன் கடையில் பணியாற்றிய பெண் பணியாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிப்பது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் தரமானதாக வழங்க வேண்டும். மத்திய அரசு தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியின் அளவு மாதந்தோறும் சரியாக வருவது போல் மாநில அரசின் தொகுப்பில் இருந்தும் சரியான அளவில் அரிசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நிவாரணம்
கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் கடைகளை அடைத்து வேலைநிறுத்ததில் ஈடுபடுவது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தமாதம்(ஆகஸ்டு) 3-ந் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கஜபதி நன்றி கூறினார்.