தப்பியோடி போலீசாரிடம் பிடிபட்ட கைதி, மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் அடைப்பு
தப்பியோடி மீண்டும் போலீசாரிடம் பிடிபட்ட கைதி, மருத்துவ பரிசோதனைக்கு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பஸ்சில் வெளியூர் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ராஜாவை(வயது 27) போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சிறையில் இருந்து அவரை, ஏம்பல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஏட்டு உள்பட 2 போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் இருந்து ராஜா தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 13 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் சிறையில் இருந்து தப்பிக்க நினைத்துள்ளார். இந்நிலையில் போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீசார் பிடியில் இருந்து தப்பித்து பஸ்சில் ஏறி வெளியூருக்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.
ஆனால் பஸ்கள் ஓடாததால் வேறு வழியின்றி காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக, ராஜா போலீசாரிடம் கூறியுள்ளார். மேலும், தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் காட்டுப் பகுதியிலேயே தங்கி இருந்ததாகவும், அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர், ராஜா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.