சென்னையில் இருந்து சைக்கிளில் சொந்த ஊருக்கு வந்த முதியவர்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரியை சேர்ந்தவர் முதியவர் சென்னையில் இருந்து சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு வந்தடைந்தார்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தெய்வநாயகபேரியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 73). இவர் கேரளாவில் உள்ள சங்கனாச்சேரியில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒருமகளும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், பாண்டியன் கேரளாவில் இருந்து சென்னையில் உள்ள தனது இளைய மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் பாண்டியனுக்கு தனது சொந்து ஊருக்கு செல்ல வேண்டும் என தோன்றியது.
ஆனால் ஊரடங்கு காரணமாக பஸ், ரெயில் இயங்காததால், சைக்கிளில் செல்ல முடிவு எடுத்து கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டார். தினமும் சிறிதுநேரம் சைக்கிள் ஓட்டுவார். இரவில் ஓய்வு எடுத்துக்கொள்வார். இவ்வாறு பயணித்து கடந்த 1-ந் தேதி தெய்வநாயகபேரிக்கு வந்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து வந்ததால் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று தன்னை 15 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது அவர் சொந்து ஊரில் உற்சாகமாக வலம் வருகிறார்.