பிளஸ்-2 தேர்வு முடிவு: மாவட்டத்தில் 96.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி - மாநில அளவில் 4-ம் இடம் பிடித்தது

எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் 96.26 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாநில அளவில் இம்மாவட்டம் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

Update: 2020-07-17 08:27 GMT
விருதுநகர்,

எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் 96.26 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் மாநில அளவில் இம்மாவட்டம் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் 9894 மாணவர்கள், 12,300 மாணவிகளும் ஆக மொத்தம் 22,194 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 9349 மாணவர்களும், 12015 மாணவிகளும் என மொத்தம் 21,364 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.49 ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.68 ஆகும். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.26 ஆகும்.

மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 94.44 சதவீதம் தேர்ச்சி பெற்று 7-வது இடத்தில் இருந்த இந்த மாவட்டம் இந்த ஆண்டு 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. எனினும் கடந்த காலங்களில் கால் நூற்றாண்டு காலம் முதல் இடத்தில் இருந்த இந்த மாவட்டம் அடுத்து வரும் ஆண்டுகளில் ஆவது மீண்டும் முதல் இடத்தை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 2149 மாணவர்களும், 2376 மாணவியரும் ஆக மொத்தம் 4525 பேர் தேர்வு எழுதினர். இதில் 1999 மாணவர்களும், 2287 மாணவிகளும் ஆக மொத்தம் 4286 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.5 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.25 ஆகும். மொத்த தேர்ச்சி 94.72 சதவீதம் ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 2870 மாணவர்களும், 3342 மாணவியரும் ஆக மொத்தம் 6212 பேர் தேர்வு எழுதினர். இதில் 2754 மாணவர்களும், 3304 மாணவிகளும் ஆக மொத்தம் 6058 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.96 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.56 ஆகும். மொத்த தேர்ச்சி 97.52 சதவீதம் ஆகும்.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 2191 மாணவர்களும், 3009 மாணவிகளும் என மொத்தம் 5,200 பேர் தேர்வு எழுதினர். இதில் 2043 மாணவர்களும், 2959 மாணவிகளும் ஆக மொத்தம் 5002 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.25 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.87 ஆகும். மொத்த தேர்ச்சி 97.77 சதவீதம் ஆகும்.

சிவகாசி கல்வி மாவட்டத்தில் 2,684 மாணவர்களும், 3573 மாணவிகளும் ஆக மொத்தம் 6257 பேர் தேர்வு எழுதினர். இதில் 2583 மாணவர்களும், 3482 மாணவிகளும் ஆக மொத்தம் 6065 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.72 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.95 ஆகும். மொத்த தேர்ச்சி 96.45 சதவீதம் ஆகும்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுதிய 322 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத சாதனையை எட்டி உள்ளது. முதல் மாணவர் 600-க்கு 578 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 8 மாணவர்கள் கம்யூட்டர் சயின்சிலும், வேதியலில் ஒருவரும், கணக்கு பதிவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்