கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு: பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு: பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல்,
தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், கந்த சஷ்டி கவசத்தை மனமுருக பாடி வழிபாடு செய்வார்கள். அதன்மூலம் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறாக விமர்சித்து ஒரு யூடியூப் சேனலில் வீடியோ வெளியானது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதோடு, வழிபாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்து அமைப்பினர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதை கண்டித்து, மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் தங்களது வீடுகளின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் தனபாலன் தலைமையில் அவருடைய வீட்டு முன்பு, அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முருகப்பெருமானின் படத்தை கையில் ஏந்தியபடி, கந்த சஷ்டி கவசம் பற்றிய அவதூறு விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
இதேபோல் பழனி பாதவிநாயகர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புலிப்பாணி ஆசிரம சிவானந்த சுவாமிகள், கண்பத் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.