திருமணமான 20 நாட்களில் விபத்தில் புது மாப்பிள்ளை சாவு

திருமணமான 20 நாட்களில் விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-07-15 04:47 GMT
துவாக்குடி,

திருவெறும்பூர் கக்கன்காலனியை சேர்ந்தவர் சுரேந்திரர்(வயது 27). இவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது நவல்பட்டு சாலையின் அருகே உள்ள ரெயில்வே கேட் கம்பத்தில் மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்