ஈரோடு மாவட்டத்தில் 2 செவிலியர்கள் உள்பட 28 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 451 ஆக உயர்வு
ஈரோடு மாவட்டத்தில் 2 செவிலியர்கள் உள்பட 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 451 ஆக உயர்ந்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி 422 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதில் 8 பேர் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 414 ஆக குறைந்தது.
அதேசமயம் ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு மாவட்ட முகவரியை குறிப்பிடுதல், வேறு மாவட்டத்தில் சென்று சிகிச்சை பெறுதல் உள்ளிட்ட காரணங்களால் 9 பேர் ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். மேலும் நேற்று 28 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அசோகபுரி பகுதியில் 4 பேர், சூரம்பட்டியில் 2 பேர், வைராபாளையத்தில் 2 பேரும், காமராஜர் வீதி, சம்பத்நகர், வரதராஜன்வீதி, பெரியண்ணா வீதி, செங்கோடன் வீதி, மணிக்கூண்டு, ரெயில்வே காலனி, கருங்கல்பாளையம், மாணிக்கம்பாளையம், ஸ்டோனி பாலம், வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர், பாவந்தி வீதி, பெரியார்நகர், சிதம்பரம் காலனி, ஈரோட்டில் உள்ள தனியார் மகளிர் விடுதி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உள்ளனர்.
இதேபோல் பவானி செம்புளிச்சாம்பாளையம், விஜயமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை ஜீவாநகர், டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூர் நேதாஜிவீதி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
கொரோனா தடுப்பு பணியில் முதன்மை பணியாளர்களாக கருதப்படும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் நேற்று ஒரே நாளில் 2 செவிலியர்கள் உள்பட 6 முதன்மை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் 20 பேர் நேற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார்கள். இதுவரை 196 பேர் குணமடைந்து உள்ளனர். 248 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.