லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-07-15 01:19 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வாகனங்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 22-ந் தேதி அனைத்து வாகன உரிமையாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். இதில் சங்கத்தலைவர் தெய்வமணி, செயலாளர் சேகர், பொருளாளர் ராமலிங்கம், சட்ட ஆலோசகர் வக்கீல் திலகராஜ், துணை செயலாளர் ஜெர்லின் ஜோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்