கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - உடலில் கத்தி குத்து
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஒரு விவசாயி தனது உடலில் கத்தியால் குத்தி கிழித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை இரண்டாவது கட்ட பணிகள் 15 வார்டுகளில் நடைபெற்று வருகிறது. இந்த வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை மறுசுழற்சி செய்வதற்காக 63-வது வார்டு கீழ கல்கண்டார்கோட்டையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆண்டாண்டு காலமாக நெல் அடிப்பதற்கான களத்து மேடாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் பல போராட்டங்களை ஏற்கனவே நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும் கீழ கல்கண்டார் கோட்டை, மேல கல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், நத்தமாடிப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் அமர்ந்து இருந்தனர்.
போராட்டம் நடத்தியவர்கள் விவசாய நிலத்தை பாழாக்காதே, கழிவு நீர் திட்டத்தை ரத்து செய் என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் பிடித்து இருந்தனர். மாநகராட்சிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான ரவிக்குமார் (வயது 40) என்ற விவசாயி திடீரென தனது கையிலும், உடலிலும் கத்தியால் குத்தி கிழித்துக் கொண்டார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் சிவராசு அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இந்த பிரச்சினைக்கு திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.