இந்திய அளவில் 4-வது இடம் பிடித்த தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சான்றிதழ்

மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 10 போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது.

Update: 2020-07-14 01:00 GMT
தேனி,

இந்திய அளவில் சிறந்த 10 போலீஸ் நிலையங்களின் பட்டியலில், இந்த ஆண்டு  தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் 4-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தில் இருந்து இடம் பெற்ற ஒரே போலீஸ் நிலையம் இதுவாகும். இந்த போலீஸ் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து 4-ம் இடம் பிடித்ததற்கான சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

தேனியில் இந்த சான்றிதழை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் நேற்று வழங்கி பாராட்டினார். அப்போது திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்