ஓசூரில் காதலி இறந்ததால் வேதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஓசூரில் காதலி இறந்ததால் வேதனை அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
ஓசூர்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வெட்டுவனம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). இவர், ஓசூர் குமுதேப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், லட்சுமி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த பெண் 3 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன வருத்தத்தில் இருந்த விக்னேஷ், குமுதேப்பள்ளியில் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபர் தனது செல்போனில் உள்ள காதலியின் புகைப்படத்தை பார்த்தவாறே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.