மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-13 01:32 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் உள்ள அரசினர் ஆரம்ப பள்ளி மற்றும் ரேஷன் கடை ஆகியவற்றிற்கு இடையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சண்முகம் தலைமையில் டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரியும், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்து, சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் விஜயன் விரைந்து வந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்