புதுச்சேரியில் புதிதாக 81 பேருக்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,418 ஆனது

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சேர்த்து பாதித்தோர் எண்ணிக்கை 1,418 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-12 22:30 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 81 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை சேர்த்து பாதித்தோர் எண்ணிக்கை 1,418 ஆக உயர்ந்துள்ளது.

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் கூறியதாவது:-

கிடுகிடுவென உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப காலத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்குக்கு பிறகு வேகம் எடுத்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் வரை 1,337 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று 866 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ததில் 81 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் களில் 54 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 17 பேர் ஜிப்மரிலும், 10 பேர் காரைக் காலிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து 26 பேரும், ஜிப்மரில் 13 பேரும், கொரோனா கேர் சென்டரில் 9 பேரும், காரைக்காலில் ஒருவரும் என மொத்தம் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

25,342 பேருக்கு பரிசோதனை

காரைக்காலில் கடந்த 10-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதால் குழந்தையை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். குழந்தைக்கு 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்படும். தற்போது அந்த பெண்ணும், குழந்தையும் நன்றாக இருக்கின்றனர்.மாநிலத்தில் இதுவரை 1,418 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 739 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 391 பேரும், ஜிப்மரில் 112 பேரும், கொரோனா கேர் சென்டரில் 78 பேரும், காரைக்காலில் 52 பேரும், ஏனாமில் 25 பேரும், மாகியில் 3 பேரும் என மொத்தம் 661 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 25,342 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் 195 பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்