கொரோனா பரவ காரணமாகும் தொழிற்சாலைகளுக்கு சீல்; கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா பரவலுக்கு காரணமாகும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை,
கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக உள்ளது. முழு அடைப்பிற்கு பிறகு தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை ஒவ்வொரு நாளும் உறுதி செய்வதுடன், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி உபயோகத்தினை உறுதி செய்திட வேண்டும். பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தால், அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும்.
இந்த நிலையில் அன்னூர், சூலூர், மதுக்கரை மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்களுக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையை அவசியம் மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் தான் மாவட்டத்திற்குள் வரவழைக்கவும் தொழிலில் ஈடுபடுத்தவும் வேண்டும் என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாமல் கொரோனா பரவ காரணமாகும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும். உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் முறையான அனுமதியின்றியோ தொற்று இல்லை என்பதற்காக சோதனை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கான சான்று பெறாமலோ தொழிலாளர்களை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து கொண்டு வர அனுமதி கிடையாது. இவற்றை தொழிற் நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்கிறதா என்று ஆய்வு செய்ய தொழிலாளர்கள் நலத்துறை, தொழிற்பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.