ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் 578 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் 578 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2020-07-11 23:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் 578 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை

பொதுமக்களுடன் அதிக தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்பதால், அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வீடு வீடாக சென்று சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்களது பணி பாதிக்காத வகையில் அந்தந்த பஞ்சாயத்து மற்றும் தாலுகா அளவில் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் புறநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு பரிசோதனை நடந்தது. நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடந்தது.

578 பேர்

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘ஈரோடு அரசு மருத்துவமனையில், ஈரோடு மாநகர் பகுதியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் உள்ள 185 பேருக்கு இன்று (அதாவது நேற்று) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் 34 பேரும், கொடுமுடியில் 9 பேரும், பெருந்துறையில் 52 பேரும், பவானியில் 93 பேரும், கோபியில் 68 பேரும், அந்தியூரில் 63 பேரும், சத்தியமங்கலத்தில் 61 பேரும், நம்பியூரில் 6 பேரும், தாளவாடியில் 7 பேரும் என மொத்தம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 578 பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது’ என்றனர்.

மேலும் செய்திகள்