தேனி மாவட்டத்தில் டாக்டர் உள்பட 90 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் டாக்டர் உள்பட 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-09 23:57 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த இரு வாரமாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,297 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 சிறுவர்கள், 3 சிறுமிகள். அதுபோக 39 பேர் பெண்கள், 46 பேர் ஆண்கள் ஆவார்கள். அதன்படி தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி பெண் டாக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

தேவாரத்தில் எல்.ஐ.சி. முகவர் உள்பட 2 பேருக்கும், சின்னமனூரில் பெண் உள்பட 3 பேருக்கும், கம்பத்தில் 6 பேருக்கும், காமயகவுண்டன்பட்டியில் 2 பேருக்கும், கூடலூரில் 5 பேருக்கும், கோம்பை, தேவாரம், க.புதுப்பட்டி, உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, தே.சிந்தலைச்சேரி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெரியகுளத்தில் 11 வயது சிறுவன் உள்பட 10 பேருக்கும், எ.புதுப்பட்டியில் 5 பேருக்கும், மதுராபுரியில் 2 பேருக்கும், சில்வார்பட்டி, தேவதானப்பட்டியில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேல்மங்கலம், வடுகபட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போடியில் 5 பேருக்கும், கோடாங்கிபட்டியில் 3 பேருக்கும், சிலமலை, பூதிப்புரம் ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 12 பேருக்கும், பழனிசெட்டிபட்டியில் 2 பேருக்கும், அரண்மனைப்புதூரில் 6 பேருக்கும், கோட்டைப்பட்டி, தர்மாபுரி, வயல்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி, ஜக்கம்பட்டி ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், அம்மச்சியாபுரம், வைகை அணை பகுதியில் தலா ஒருவருக்கும், வத்தலக்குண்டு, சென்னை பகுதியில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வந்த தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஒரே நாளில் 90 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,387 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்