பட்டப்பகலில் பயங்கரம் தாராவியில் வாலிபர் குத்திக்கொலை 3 பேருக்கு வலைவீச்சு
தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
தாராவியில் பட்டப்பகலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கத்தியால் குத்தினர்
மும்பை தாராவி சுபாஷ்நகர் பகுதியில் பாட்டியுடன் வசித்து வந்தவர் கவுசிக்(வயது17). இவர் கிராஸ்ேராடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் அனுமன் சவுக் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கவுசிக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு உருவானது. இந்தநிலையில் திடீரென 3 பேரும் கத்தியால் கவுசிக்கின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர்.
3 பேருக்கு வலைவீச்சு
இதில் கவுசிக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் கவுசிக்கை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாலிபர் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாராவி போலீசார் தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.