வாலாஜா தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா: ஜமாபந்தி தள்ளி வைப்பு

வாலாஜா தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஜமாபந்தி தள்ளி வைக்கப்பட்டது.

Update: 2020-07-08 02:37 GMT
வாலாஜா, 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்த தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் தனி தாசில்தார் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகம், இ-சேவை மையம், நில அளவை அலுவலகம், கருவூல அலுவலகம் உள்பட தாலுகா அலுவலகம் முழுவதும் மூடப்பட்டது.

இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டன. முடிவுகள் வந்த பின்னர் அலுவலகங்கள் திறக்கும் நாள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் நேற்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வேறு தேதிக்கு மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்