நாகை மாவட்டத்தில் ஒரேநாளில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-07 06:26 GMT
நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக இருந்தது. இதில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 5 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 280 ஆக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் வேதாரண்யம் தாலுகாவில் 2 பேருக்கும், கீழ்வேளூரில் 3 பேருக்கும், தரங்கம்பாடியில் 3 பேருக்கும், சீர்காழியில் 17 பேருக்கும், மயிலாடுதுறையில் 5 பேருக்கும் என 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது. இதில் 128 பேர் குணமடைந்துள்ளனர். 182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்