ராமநாதபுரம் மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,361 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் எம்.ஐ.காலனி 40 வயது நபருக்கும், ஆண்டாவூரணி தேத்தாதங்கோட்டை 44 வயது நபர், ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்சு டிரைவர் 38 வயது நபர், தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை சோதனைசாவடி போலீஸ்காரர்கள் 29 மற்றும் 33 வயது நபர்கள், ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின்ரோடு 45 வயது நபர், பரம்பை ரோடு 50 வயது நபர், தெய்வம்மாள் தெரு 32 வயது நபர், திருப்புல்லாணி கிழக்கு நாடார் தெரு 26 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கீழக்கரை கிழக்கு நாடார் தெரு 57 வயது நபர், தட்டான்தெரு 29 வயது நபர், மறவர் தெரு 49 வயது நபர், அன்புநகர் 56 வயது நபர், அவரின் மனைவி, தட்டான்தோப்பு 36 வயது பெண், எக்ககுடி தெற்குத்தெரு 50 வயது பெண், ராமநாதபுரம் பாரதிநகர் 43 வயது நபர், கீழஅல்லிக்குளம் மெயின்ரோடு 34 வயது நபர், காமன்கோட்டை வடக்குத்தெரு 23 வயது நபர், செபஸ்தியார்புரம் தெற்குத்தெரு 49 வயது பெண், 27 வயது நபர், ராமநாதபுரம் வெளிப்பட்டணம் 58 வயது நபர், ராமநாதபுரம் சிவன்கோவில் தெரு 20 வயது நபர், அவரின் தம்பி 18 வயது நபர், அக்காள் 22 வயது பெண், ராமநாதபுரம் 55 வயது நபர், 30 வயது பெண், சக்கரக்கோட்டை 55 வயது நபர், மகாசக்திநகர் 34 வயது நபர், ஸ்ரீநகர் 33 வயது பெண், ராமலிங்கபுரம் 57 வயது பெண், உச்சிப்புளி 57 வயது நபர், ராமநாதபுரம் 30 வயது நபர், மருதுபாண்டியபுரம் 44 வயது நபர், ராமநாதபுரம் 25 வயது பெண், எம்.எஸ்.கே.நகர் 35 வயது நபர், வேர்க்கோடு 20 வயது பெண், ராமநாதபுரம் 40 வயது நபர், காட்டூரணி 27 வயது நபர், பரமக்குடி 35 வயது நபர், ராமேசுவரம் 28 வயது பெண், ராமநாதபுரம் 26 வயது நபர், மதுரயார்தெரு 62 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,419 பேர்
இதுதவிர பரமக்குடி வளையான்குடியிருப்பு 48 வயது நபர், விளத்தூர் மாரியம்மன்கோவில் தெரு 47 வயது நபர், காட்டுப்பரமக்குடி கீழத்தெரு 43 வயது பெண், பரமக்குடி தாமரைக்குளம் 30 வயது நபர், மூவேந்தர் நகர் 70 வயது நபர், பரமக்குடி முருகன்கோவில் தெரு 50 வயது நபர், மேலச்சத்திரம் 33 வயது பெண், அவரின் ஒருமாத குழந்தை, பரமக்குடி பட்டாபி சீதாராமர் தெரு 58 வயது நபர், அவரின் மகன், பரமக்குடி பாரதி்நகர் முல்லை வீதி 46 வயது நபர், 46 வயது பெண், எமனேசுவரம் 32 வயது நபர், பரமக்குடி குத்துக்கல் தெரு 22 வயது நபர், 52 வயது நபர் என 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகஅளவில் உயர்ந்து வருவதும் தற்போதைய நிலையில் 1,500-ஐ நெருங்கி சென்றுள்ளதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.