கடைகளில் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
கடைகளில் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
கடைகளில் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
உள்ளாட்சி மதிப்பீடு
புதுவை கவர்னர் கிரண்பெடி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். அது தொடர்பாக தனது மதிப்பீடுகளை சமூக வலைதளத்திலும் பதிவிடுகிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- வில்லியனூர், பள்ளூர் ஆகியவையின் செயல்பாடு மோசமாக உள்ளது. அவை தனது செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும். நெட்டப்பாக்கம், நெடுங்காடு, நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்களின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. அவைகளின் செயல்பாடுகளில் முன்னேற்றம் வேண்டும்.
ஆரோக்கிய சேது செயலி
காரைக்கால் ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டில் பூஜ்ஜியம். அதுபோல் மாகியில் முன்னேற்றம் காண செயல்பட வேண்டும். ஏனாமும் சற்று அதிக முன்னேற்றம் காண வேண்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்த வேண்டும். நெட்டப்பாக்கம் கொம்யூன் நல்ல முன்னேற்றம். மற்ற சிலவற்றிலும் முன்னேற்றம் வேண்டும். காரைக்கால் இன்னும் பின் தங்கியுள்ளது. தொழிலாளர் துறை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளது. தொழிலாளர் துறை, உள்ளாட்சி துறையுடன் இணைந்து கடைகளில் இந்த ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்த கற்பிக்க வேண்டும். ஏனெனில் இந்த தொற்றின் மூலஆதாரமே கடைகள்தான். சமீப நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ஐக்கிய சேவைகளின் இணைய தளத்தை பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.