களக்காடு, திசையன்விளையில் 9 பேருக்கு கொரோனா
களக்காடு, திசையன்விளையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
களக்காடு,
களக்காடு, திசையன்விளையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
களக்காடு
நெல்லை மாவட்டம் களக்காட்டில் நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகைக்கடை உரிமையாளருடைய மனைவி, அவரது உறவினர், அண்ணா சாலையை சேர்ந்த வாலிபர், உதயமார்த்தாண்டபேரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், மாவடியில் 14 வயது சிறுமி என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா தலைமையில், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் வேலு, சண்முகம் மற்றும் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
திசையன்விளை
இதேபோல் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர், மன்னார்புரத்தை சேர்ந்த இளம்பெண், உவரி சார்லஸ் தெருவைச் சேர்ந்த பெண், வல்லான்விளையைச் சேர்ந்த வாலிபர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செல்வமருதூரைச் சேர்ந்த வாலிபரின் தந்தை ஏற்கனவே கொரோனா நோயாளியாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகிரி
சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் வரிவசூலிப்பவராக பணியாற்றியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் 2 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவர்கள் வசிக்கின்ற பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.