ஒரே நாளில் 7 ஆயிரத்து 74 பேருக்கு தொற்று மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது
ஒரே நாளில் 7 ஆயிரத்து 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
மும்பை,
ஒரே நாளில் 7 ஆயிரத்து 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
2 லட்சத்தை தாண்டியது
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் நேற்றும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 74 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாநிலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி உள்ளது. இதுவரை மராட்டியத்தில் 2 லட்சத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் மேலும் 295 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 8 ஆயிரத்து 671 பேர் பலியாகி உள்ளார்கள். இதேபோல மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 82 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
மும்பை நிலவரம்
மும்பையில் நேற்று புதிதாக 1,180 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 237ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல நகாில் மேலும் 68 பேர் பலியானார்கள். இதுவரை மும்பையில் 4 ஆயிரத்து 830 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல தானே மாவட்டத்தில் 45 ஆயிரத்து 833 பேரும், பால்கர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 173 பேரும், ராய்காட் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 585 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.