இடையமேலூர், அரசனூர், சிங்கம்புணரி பகுதிகளில் இன்று மின் தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இடையமேலூர், அரசனூர், சிங்கம்புணரி பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-04 02:06 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த இடையமேலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை காமராஜர் காலனி, தமறாக்கி, குமாரப்பட்டி, இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர், மலம்பட்டி, புதுபட்டி, முத்துப்பட்டி, பொன்னாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின்வினியோகம் இருக்காது என்று சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார். இதேபோல் சிவகங்கையை அடுத்த அரசனூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தானேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின்வினியோகம் இருக்காது என்று மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார். சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கம்புணரி மற்றும் சிங்கம்புணரி நகர் பகுதி, எஸ்.வி மங்களம், காளாப்பூர், பிரான்மலை, கண்ணமங்கலம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா(பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்